Home மலேசியா சினிமா அரங்குகள் திறப்பது ஆபத்தானது.. அவசரம் வேண்டாம் ! பொதுமக்கள் கருத்து

சினிமா அரங்குகள் திறப்பது ஆபத்தானது.. அவசரம் வேண்டாம் ! பொதுமக்கள் கருத்து

கொரோனா தொற்று கிருமிகள் முற்றாக ஒழிக்கப்படாத நிலையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடமாட்டக் கடுப்பாடு ஆணைக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சில மாதங்கள் வரை இயங்க அனுமதி வழங்காமல் இருப்பது பாதுகாப்பானது என ராமநாயுடு கிருஷ்ணன் கூறினார்.

ஜூலை 1ம் தேதி முதல் நாட்டிலுள்ள சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது குறித்து அத்தரப்பு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் கே.ஜி.முருகன்.

என்னதான் எஸ்ஓபியை பின்பற்றி அரங்குக்குள் உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும், அந்த இருட்டான சூழ்நிலையில் பக்கபக்கமாய் அமர்ந்துக்கொண்டு சினிமாவை பார்க்கவே விரும்புவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

தமக்கு என்னமோ இது அவசர முடிவாக தெரிகிறது என சேகர் செல்வம் மற்றும் பாலமுருகன் சண்முகம் கூறினார்கள். சினிமா அரங்குகளில் கூடும் கூட்டம், ஒரு குறிப்பிட்டவர்களாக இருக்காது, அவற்றில் அந்நிய நாட்டவர்கள் என பலத்தரப்பட்ட மக்கள் கூடும் கூட்டமாகவே இருக்கும், அதனால் கொரோனா மீண்டும் மறுப்பிரேவசம் எடுக்க வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சில இளம் வயதினார் சந்தித்தப்பொழுது, சினிமா அரங்குகள் மீண்டும் திறப்பது மகிழ்ச்சிதான்,

ஆனாலும் கொரோனா கிருமிகள் மீண்டும் வந்து விடுமோ என பயமாகதான் இருக்குது என்கிறார்கள் நா.பிரவின், ரா.திலகா மற்றும் ரா.சேது ஆகியோர்.

சினிமா அரங்குகள் மீண்டும் திறப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

எஸ்ஓபியை கடைப்பிடிக்கும் போக்கு நாளுக்கு நாள் மக்களிடையே குறைந்து காணப்படுகிறது.

இந்நிலைமையில் இத்தளர்வுகளால் விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது என ராகினி பெருமாள் சிவலிங்கம்,

கிருஷ்ணவேணி கிருஷ்ணன் மற்றும் சரோஜாதேவி ஆகியோர் அச்சம் தெரிவித்தார்கள்.

– நாகேந்திரன் வேலாயுதம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version