Home மலேசியா உடலுக்குப்பயிற்சி தேவை

உடலுக்குப்பயிற்சி தேவை

உடலுக்குப்பயிற்சி தேவை,பயிற்சிக்கு உடல் தேவை என்று மாறிவருவது ஆரோக்கியமான செயல் அல்ல என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

கோவிட் காலத்தில் நடமாட்ட கட்டுப்பாட்டில் இருந்ததால் வெளிவட்டாரப் பயிற்சிகள் வெகுவாகக்குறைந்துவிட்டன. சுமார் மூன்று மாதங்களக ஓய்வில், உடலுக்கு திடீர் வேலகளைக்கொடுப்பது நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தாமல் மிதமான பயற்சிகளே உடலுக்கு இதமாக இருக்கும். கடுமையான பயிற்சிகல் உடலுகுத்தீங்காகவே முடியும், உடல் ஆரோக்கியமற்றவர்களுக்கு மரணத்தையும் ஏற்படுத்திவிடும்.

அண்மையில் நால்வரின் இறப்பும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்குக்காரணம் பயிற்சியினால் ஏற்பட்ட இருதய பாதிப்பு என்கிறார் டத்தோ டாக்டர் லுவா லியன் வ்வா.

பொது பூங்க்காக்கள் திறந்துவிடப்பட்டபின் இச்சமபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பொதுமக்கள் இருதய தொடர்பானவற்ரை உணர்ந்து அதற்கேற்ப பயிர்சிகளில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுக்கின்றனர்.

இழந்ததைபிடிக்க ஓடுவதுபோல் பயிற்சிகளில் தீவிரம் காட்டுவதால் எதையும் சாதிக்கப் போவதில்லை. அதற்குப்பதிலாக இழப்பு என்று வந்துவிட்டால் அதன் பின்னணி சோகமாகத்தான் இருக்கும்.

உடற்பயிற்சி இல்லதிருந்த உடலுக்கு பயிற்சி தேவைதான், அதற்காக மூன்று மாதப்பயிற்சியை ஒரே நாளில் என்பது உடலுக்கும் உயிருக்கும் துன்பமே தரும்.

பயிற்சிகள் செய்யும்போது இருதயம் என்ற கடவுள் இருப்பதை உணர்ந்து மெதுவாகச்செய்து இருதயம் அதை ஏற்கும் காலம் வரை பொறுமைக்காக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version