Home மலேசியா போலி விமானிகள்

போலி விமானிகள்

பல விமானிகள் சந்தேகத்திற்குரிய தகுதிகளைக்கொண்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சித்தகவல்கள் இருப்பதாக தெற்காசிய நாடுகள் தகவல்கள் அளித்துள்ளன. அந்த அடைப்படையில்  மலேசியாவின் விமானிகள் சிலரின்  உரிமங்கள் போலியானவை என்பது  அறியப்பட்டிருக்கிறது. அவர்களில் உள்நாட்டு விமான நிறுவனங்களில் பணிபுரியும் பாக்கிஸ்தானிய விமானிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏஎம்) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு விமானிகளையும் மதிப்பீடு செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளது. நாட்டில் 20க்கும் குறைவான பாக்கிஸ்தான் விமானிகள் இருக்கின்றனர்.

தேசிய விமான சேவையான மலேசியா ஏர்லைன்ஸ் தன்னிடம்  எந்த  பாகிஸ்தான் விமானியும் இல்லை என்கிறது. அதேபோல்  இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் மலேசியப் பிரிவான மலிண்டோ ஏர், தன்னிடம் எந்த வெளிநாட்டு விமானிகளும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. ஏர் ஏசியாவும் எந்த பாகிஸ்தான் விமானிகளும் விமானிகளாக இல்லை என்றும் கூறியிக்ருகிறது.

பாகிஸ்தானில் மொத்தம் 860 விமானிகள் உள்ளனர், அவர்களில் 107 பேர் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இந்த அறிவிப்பிலிருந்து உலகளாவிய பார்வைக்கு பாக்கிஸ்தான் விமானிகள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. அவர்களின் சான்றுகளைச் சரிபார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

உரிமம் வைத்திருப்பவர்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க அதன் பாக்கிஸ்தான் பிரதிநிதியுடன் தொடர்புகொண்டு  வருவதாக CAAM தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சரிபார்க்கப்பட்ட உரிமம் உள்ளவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று ஆணையம் கூறியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version