Home உலகம் எகிப்தில், பெண்கள் பாலியல் துஷ்பிரயோம்!

எகிப்தில், பெண்கள் பாலியல் துஷ்பிரயோம்!

டஜன் கணக்கான சிறுமிகளையும் பெண்களையும் இணையத்தளம் மூலம்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒருவரை எகிப்திய அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஓர் ஆணின் பிடியில் பெண்கள் அனுபவிக்கும் கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம், அது தொடர்பான அச்சுறுத்தல்களை விவரிக்கும் குற்றச்சாட்டுகள்  அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

அந்நபர் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்பட்டது.

சிறுமிகளை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வழக்குத் தொடரப்போவதகவும் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அனுபவித்த தீங்கு குறித்த முறையான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்  என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

ஆதாரமாக  சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்றும் பின்னர் ஓர் அறிக்கையில், அந்த நபரை அடையாளம் கண்டு, விசாரணை தொடங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

சமூக ஊடக அறிக்கையின்படி,  இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட  இந்த துஷ்பிரயோகம் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 2016 வரை டேட்டிங் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு பெண்ணிடமிருந்து புகார் கிடைத்ததை அரசு தரப்பு கூறியது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபரின் பெயரைக் கொண்ட பிரபலமான ஹேஷ்டேக்குகள் ட்விட்டர்,  பேஸ்புக்கில் பரவலாக பரவி, அரசாங்கப் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

எகிப்தின் தேசிய பெண்கள் கவுன்சில் (என்.சி.டபிள்யூ) சனிக்கிழமை இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசு வழக்கறிஞரிடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தது.

இன்ஸ்டாகிராமில் உள்ள சமூக ஊடகக் கணக்கை என்.சி.டபிள்யூ கண்காணிக்கத் தொடங்கியது இதில்,  ஒரு பெண், அவர்களில் சிலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும்  புகைப்படங்கள் , கிளிப்களைப் பயன்படுத்தி அவர்களை அவதூறு செய்வதாகவும் புகாரில் விவரித்தார்.

குற்றவாளியாக இருப்பவர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்று  தெரியவருகிறது.

கெய்ரோவில் உள்ள அமெரிக்கப்  பல்கலைக்கழகம், சந்தேக நபர் அங்கு படித்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் 2018 இல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார் என்றும் தெரிவித்திருக்கிறது.

கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தற்போதைய மாணவர் அல்ல என்று ஓர் அறிக்கை கூறியுள்ளது.

எகிப்தில் பாலியல் துன்புறுத்தல் அதிகம் காணப்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுகள், பெரும்பாலான எகிப்திய பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்  என்பதை மறுக்கவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version