Home Hot News அனைத்துலக போலி முத்திரைப் பொருட்களின் பிறப்பிடம் சீனா

அனைத்துலக போலி முத்திரைப் பொருட்களின் பிறப்பிடம் சீனா

உலகில் உலவும் அனைத்து முத்திரை பொருட்களும் சீனாவிடமிருந்து போலியாக தயாராகி உலகம் முழுவம் உலா வருகின்ற நிலைக்கு இதுவரையில் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உலகம் தவித்து வருகிறது.

மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட உள்நாட்டு வர்த்தக பயனீட்டாளர் விவகார அமைச்சின் அதிகாரிகள் அங்கிருந்து 52 நிறுவனங்களின் போலி முத்திரை பொருட்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

உலகின் பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை தயாரித்து அதனை சந்தைப்படுத்துவதில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

அசலைப் போலவே தோற்றமளிக்கும் இந்த போலிப்பொருட்கள் மலிவான விலைக்கு வாங்கப்பட்டு மலேசிய சந்தைகளையும் ஆக்கிரமித்து வருகின்றன.

சீன வம்சாவளியினர் மலேசியாவில் வசித்து வருவதாலும் அதன் காரணமாக அவர்கள் மத்தியில் அதிகமான வியாபாரிகள் இருந்து வருவதாலும் போலிப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சீன நாட்டு வியாபாரிகளுக்கு சிரமம் இருப்பதாகத் தோன்றவில்லை.

கைப்பைகள். கடிகாரங்கள் என அனைத்துப் போலிப் பொருட்களும் மலேசிய சந்தையில் இரண்டறக் கலந்து விட்ட காரணத்தால் யாரிடம் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் மலேசியர்கள் இனி கவனமாக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version