Home மலேசியா ஊடகங்களின் பங்களிப்பு சிறப்பானது

ஊடகங்களின் பங்களிப்பு சிறப்பானது

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களின் பங்களிப்பு சிறப்பானது என்று  சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) ஒப்புக் கொண்டுள்ளது.

துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்க கொள்கைகள், திட்டங்களை விளக்குவதைத் தவிர, தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் பரப்புவதிலும், பொதுமக்களின் கருத்தைச் சரிசெய்யக்கூடிய ஒரு மேனிலை நிறுவனமாக செயல்படுவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானதாக இருந்துவருகிறது.

ஊடகப்  பணியாளர்களும் முன்னணியில் இருப்பவர்கள், அவர்களும் ஆபத்தோடுதான் பணியாற்றுகிறார்கள் ஆபத்ததைத் தேடிப்பொகின்றவர்களாக இல்லாவிட்டாலும் ஆபத்தஎன்று உணரவைக்க அவர்களே களத்தில் இருக்க வேண்டியாகிறது. அவர்கள் வலி யுடனும் போராட்டத்தை எதிர்கொண்டும் செல்கிறார்கள்.

எனவே,  அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, பொறுமைக்கு நன்றி சொல்ல சுகாதார அமைச்சகம் விரும்புகிறது என்று அவர் தனது உரையில் பல்வேறு முகவர் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 120 ஊடக வியலாளர்களின் இரவு விருந்தில் கூறினார்.

கோவிட் -19 தொற்ருக்கான எதிர்ப்பில்  மலேசியாவின் வெற்றி பல்வேறு பிரிவினரின் முயற்சியும் ஒத்துழைப்பும்  என்று  அவர் மேலும் கூறினார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version