Home மலேசியா கிள்ளான் வடக்கு துறைமுகம் உலகின் பத்தாவது இடத்திற்குக்குகுறி

கிள்ளான் வடக்கு துறைமுகம் உலகின் பத்தாவது இடத்திற்குக்குகுறி

கப்பல் துறைகளின் நிதிச் சுமைகளைப் போக்கும் முயற்சியில் போர்ட் கிள்ளான் துறைமுக ஆணையம் (PKA) மூலம் மாற்றுவழிகளை திட்டமாகக்கொண்டிருக்கின்றன என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீரி டாக்டர் வீ கா சியோங், அணமையில் கூறினார்.

ஒரு மாநாட்டின் போது பி.கே.ஏ இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முயற்சிகள், துறைகளை புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுவதால பல முறைகளை உள்ளடக்கியது என்றார் அவர்.

முதல் முறை சரக்கு கொள்கலன்களுக்கு இலவச கூடுதல் காலத்தை நீட்டிப்பதாகும்.  இறக்குமதி கொள்கலன்களுக்கு காலம் நான்கு நாட்களில் இருந்து ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஏற்றுமதி சரக்குகளுக்கு ஐந்து நாட்களில் இருந்து ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்களால் விதிக்கப்படும் அனுமதிகள், கட்டணங்கள் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) முழுவதும் டிசம்பர் வரை விலக்கு அளிக்கப்படுகின்றன.

இது துறைமுக பயனர்களால் ஏற்படும் செலவுகளைக் குறைப்பதற்கும், இந்தத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஆகும் என்று அவர் போர்ட் கிள்ளானுக்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுத்த முயற்சியாக டெர்மினல் இயக்கம், கப்பல் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு வணிக ஊக்கத்தொகை குறித்தும் வீ கூறினார்.

உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் தளவாடங்கள் துறையில் வர்த்தகத்தை மேலும் பன்முகப்படுத்தவும் போர்ட் கிள்ளானில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மயமாக்கல் முறை உருவாக்கப்படும் என்றார் அவர்.

தொடர்ந்து, போர்ட் கிள்ளானில் உள்கட்டமைப்புத் திறனை அதிகரிப்பதாகும். உற்பத்தித்திறன் வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு மார்ச் முதல் டிசம்பர் வரை குத்தகைதாரர்கள், கப்பல் நிறுவனங்கள் , ஜெட்டி பணிக்கு பி.கே.ஏ வழங்கும் நிதி சலுகைகளில் 2.3 மில்லியன் வெள்ளி வழங்கப்படுகிறது.

போர்ட் கிள்ளான் இலவச மண்டலத்திற்கான (பி.கே.எஃப்.ஜெட்) 30 சதவீத வாடகை வசூல், இந்த மாதம் தொடங்கி ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்.எம் .14 மில்லியன்  ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

வருகையின் போது, ​​அவர் வயர்லெஸ் ரிமோட் பிசெக் முறைப்பாடியும் தொடக்கிவைத்தார்.

வெஸ்ட்போர்ட் துறைமுகத்தை இந்த அமைப்பைகொண்ட  உலகின் முதல் துறைமுகமாக மாற்றினார். இம்முறையினால் மூன்று நிமிடங்களுடன் ஒப்பிடும்போது 30 வினாடிகளில் மட்டுமே கொள்கலன் பரிமாற்றத்தைச் செயல்படுத்துகிறது.

இதற்கிடையில், போர்ட் கிள்ளான் துறைமுகம் தற்போது உலகின் 12 ஆவது பெரிய கொள்கலன் துறைமுகமாக இருக்கும்போது, ​​முனைய விரிவாக்கம் , சரக்கு கொள்கலன் கையாளுதல் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இது முதல் 10 ஆவது  இடத்தை அடைய முடியும்  என்றார் அவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version