Home தொழில்நுட்பம் 5ஜி நிபுணத்துவத்திற்கு மலேசியா மாற்றம்

5ஜி நிபுணத்துவத்திற்கு மலேசியா மாற்றம்

தொலைதூர அறிதலை எளிதாக்குவதற்கு 5ஜி முறை சிறப்பானதாக இருக்கிறது என்பதை தொடர்பு பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறியிருக்கிறார்.

5ஜி அலைக்கு மாறுவதால் மேம்பாடடைந்த நாடுகளுக்கு இணையாக போட்டியிடமுடியும் என்றார் அவர்.

தற்சமயம் மலேசியாவின் 71 நிறுவனங்கள் 5ஜி மாற்றத்தை பரீட்சார்த்தமாக பயன்படுத்திவருகின்றன என்றார் அவர். இவையாவும் தனியார் நிறுவனங்கள்.

இதில், செல்கோம், டிஜி, எடோட்கோ, மாக்சிஸ், பெட்ரோனாஸ், டெலிகோம் மலேசியா, யூ மோபைல், ஒய்திஎல் என இருக்கின்றன.

5ஜி முறையை மேலும் விரிவுபடுத்தும் செயல்முறைக்கு கெடா, பகாங், பினாங்கு, பேராக், சிலாங்கூர், திரெங்கானு. கூட்டரசு மாநிலங்கள் தயாராகிவிட்டன. இதற்காக 131 மில்லியன் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ஏற்ப தயார்ப்படுத்திக்கொள்வதே நோக்கமாகும் என்று, மலேசியா முதிலீட்டுத் திட்டம் 2020 அறிமுக நிகழ்ச்சியின் போது அவர் இவ்வாறு கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version