Home ஆன்மிகம் கடுமையான நோயிலிருந்து விடுபட ருத்ர மந்திரம்

கடுமையான நோயிலிருந்து விடுபட ருத்ர மந்திரம்

சிவப்பெருமானை வணங்க உகந்த நாளான இன்று கடுமையான நோய் மற்றும் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பெறவும் தீயவற்றை அழிக்க சினம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானே போற்றும் இந்த ருத்ர மந்திரத்தை சொல்லிவந்தால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாயஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். சிவப்பெருமானுக்கு உகந்த நாட்களான் திங்கட்கிழமைகள் பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மந்திரத்தை 27 முறை சொல்லிவந்தால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

மூவுலகிற்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவ பெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும் திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும் உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும் கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும் சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவப்பெருமானை வணங்குகிறோம் என்பதே இதன் பொதுவான பொருளாகும். அவனருளாலே
எல்லாம்
சிவனருளாலே

எல்லாம் வல்ல அம்மையப்பரே போற்றி போற்றி. ..
ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! சிவாய நம.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version