Home உலகம் மக்களிடம் அழுது மன்னிப்பு கேட்டதற்கு…

மக்களிடம் அழுது மன்னிப்பு கேட்டதற்கு…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கண்கலங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் இராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற புதிய சக்தி வாய்ந்த ஏவுகணை குறித்து உலக நாடுகள் விவாதித்தன. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவை அரசு தொலைகாட்சியில் ஒளிபரப்பினர்.

இந்நிலையில் விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் அழுது மன்னிப்பி கேட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் “வானத்தை விட உயரமாகவும், கடலை விட ஆழமாகவும் என் நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டேன். இதற்காக என்னை மன்னித்து விடுங்கள். எனது தாத்தா, அப்பாவிற்கு பிறகு எனக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

உங்கள் வாழ்வியல் சிரமங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனது முயற்சிகள் அனைத்தும் நேர்மையானதாக இருக்கும்” என கண்கலங்கியப்படி பேசியுள்ளார். இதனை பார்த்த இராணுவ வீரர்களும் கண் கலங்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அரசியல் ஆய்வாளர்கள் மக்கள் அனுதாபத்தை பெற தான் கிம் இவ்வாறு பேசியுள்ளார் என தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version