Home இந்தியா குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சவுமியா பாண்டே, இவர் மோதிநகர் சப் டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய இவர் கடந்த ஜூலை மாதம் காசியாபாத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் வரை பணியில் இருந்த கர்ப்பிணியான சவுமியா பிரசவ விடுப்பு எடுத்து கொண்டு விடுமுறையில் சென்ற நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, 14 நாட்கள் கழித்து தனது பணிக்கு மீண்டும் திரும்பி அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறும்பொழுது, நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.அதனால் எனது பணியை நான் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.  குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார். இதேபோன்று எனது குழந்தையுடன் நிர்வாக பணியை நான் கவனித்து கொள்வதென்பது கடவுளின் ஆசிர்வாதமாகும் என தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது: எனக்கு குடும்பம் போன்ற மாவட்ட நிர்வாகம் எனது பிரசவத்தின்போது மற்றும் பிரசவத்திற்கு பின்னரும் முழு ஆதரவு வழங்கியது. கொரோனா காலத்தில் பணியாற்றும்பொழுது ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version