Home மலேசியா எஸ்ஓபி விதிமுறைகள் அபாயத்தைக் குறைக்கும்

எஸ்ஓபி விதிமுறைகள் அபாயத்தைக் குறைக்கும்

 

மகாதீர்  நம்பிக்கை

கோலாலம்பூர்-
நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகப் பதிவுசெய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அது குறித்த எஸ்ஓபி விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

தற்போது நாட்டில் இந்தப் பெருந்தொற்றின் பரவல் மிகவும் அபாயகர நிலையை எட்டியுள்ளது. இச்சுழ்நிலையில் பொதுமக்கள் அது குறித்த எஸ்ஓபி விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால் தொற்றுப் பரவல் சம்பவங்களும் மரணங்களும் அதிகரிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் நேரத்தைத் தியாகம் ஙெ்ய்து பொறுமை காக்க வேண்டும். குறிப்பாக நோன்புப் பெருநாள் காலத்திலும் அவர்கள் இந்த எஸ்ஓபி விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

முக்கிய அலுவல் ஏதும் இல்லையென்றால் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுய ஒழுங்கு மிகவும் அவசியம். போலீசார், இதர முக்கிய அமலாக்கப் பிரிவினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டாலும் அவர்களால் அனைவரையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியாது.

எனவே, நாம்தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் இந்தத் தொற்றுப் பரவலைக் கவனிக்காவிட்டால் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளைப்போல் மோசமான சுழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்  சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version