Home Hot News ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பில் MAEPS மருத்துவர்களிடம் நள்ளிரவில் போலீசார் விசாரணை குறித்து...

ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பில் MAEPS மருத்துவர்களிடம் நள்ளிரவில் போலீசார் விசாரணை குறித்து வழக்கறிஞர் கண்டனம்

 மலேசியா அக்ரோ எக்ஸ்போசிஷன் பார்க் செர்டாங் (MAEPS) சிகிச்சை மையத்தின் மருத்துவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக நள்ளிரவில் காவல்துறையினர் விசாரித்ததை அடுத்து ஒரு வழக்கறிஞர் போலீஸ் மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

அவர்கள் கடமையில் இருந்தபோது, ​​நேற்று இரவு 11.45 மணி முதல் இன்று அதிகாலை 3.50 மணி வரை விசாரிக்கப்பட்டதாக மருத்துவர்கள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆஷீக் அலி சேத்தி அலிவி தெரிவித்தார்.

அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கவும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் அவர் அங்கு இருந்தபோது, ​​அவர்கள் விசாரிக்கப்படும்போது அவர் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றார்.

நேற்றிரவு நடந்த விசாரணையில் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த போலீஸ் புகாரினை தொடர்ந்து, அதாவது MAEPS தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் இயக்குனர், வேலைநிறுத்தம் தொடர்பாக   இருந்திருப்பது உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்று குற்றம் சாட்டினார் ஆஷீக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கடமையில் இருந்தபோதும், அதிகாலை நான்கு மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டன. இது சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறையினரின் மிரட்டல் செயலாக நான் கருதுகிறேன்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா உறுதியளித்ததிலிருந்து பல மருத்துவமனைகளைச் சேர்ந்த மற்ற மருத்துவர்களையும் போலீசார் விசாரிக்க அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

போலீஸ்  புகாரினை திரும்பப் பெறுமாறு MAEPS மைய இயக்குநருக்கு அறிவுறுத்துவதாகவும், உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினர் தங்கள் விசாரணையை கைவிடுமாறு அமைச்சுக்கு அவர் வலியுறுத்தினார்.

மருத்துவர்கள் ஏற்கனவே மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போயுள்ளனர். அவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதை நிறுத்துங்கள். சுகாதார அமைப்பு ஏற்கனவே சரிந்து வருகிறது. அவற்றை மேலும் உடைக்க வேண்டாம் என்று ஆஷீக் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version