Home மலேசியா மீண்டும் பாதுகாப்பாக பள்ளிக்குத் திரும்புவோம் – இரண்டாம் ஆண்டாக கார்ல்ஸ்பெர்க் ஆதரவு

மீண்டும் பாதுகாப்பாக பள்ளிக்குத் திரும்புவோம் – இரண்டாம் ஆண்டாக கார்ல்ஸ்பெர்க் ஆதரவு

அக்டோபர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான சுழலில் நேர்முகக் கல்வியைத் தொடங்குவதற்கு கார்ல்ஸ்பெர்க் மலேசியா பாதுகாப்பான பள்ளிகள் பிரச்சாரத்தின் வழி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 16 லட்சம் ரிங்கிட்டை வழங்க உறுதி அளித்துள்ளது.

நம் பிள்ளைகள் தொடர்ந்து கல்வியில் பெரும் இழப்பை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடக்கம் கட்டங்கட்டமாகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கோவிட்-19 கொடுந்தொற்று பரவல் ஏற்படுத்திய சவால்களுக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேர்முகக் கல்வியைத் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் சிறந்தவற்றை வழங்குவதற்கு கார்ல்ஸ்பெர்க் மலேசியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று அதன் நிர்வாக இயக்குநர் ஸ்டெஃபினோ கிலினி தெரிவித்தார்.

இந்தப் பிரச்சார இயக்கத்தில் 100 பள்ளிகளுக்கு கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் சேவைகள் சென்றடைய உள்ளன. 16 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 622 முகம் பார்த்து உடல்வெப்பத்தை அறிவிக்கும் தெர்மோமீட்டர்கள், கிருமிநாசினி தெளிப்பு சேவைகள் வழங்கப்பட உள்ளன என்று கார்ல்ஸ்பெர்க் மலேசியா கார்ப்பரேட் விவகார இயக்குநர் பெர்ல் லால் கூறினார்.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் பாதுகாப்பான பள்ளிகள் பிரச்சார இயக்கத்தில் தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள தேசியப் பள்ளிகள், தமிழ், சீன ஆரம்பப்பள்ளிகள் இடம்பெற்றுள்ளன. இச்சேவைகளைப் பெற விரும்பும் பள்ளிகள் 2021 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பாரங்களை CarlsbergMalaysia.com.my/covid-19/safer_Schools&2021 என்ற அகப்பக்கத்தில் பெற்றுகொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு: அண்டெல் கூட 019-3563909, நிக்கோல் பாங் 019-3822555.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version