Home COVID-19 நாட்டில் இதுவரை 94.2 விழுக்காடு பெரியவர்கள் , 38.7 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட் -19...

நாட்டில் இதுவரை 94.2 விழுக்காடு பெரியவர்கள் , 38.7 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர்: நேற்றுவரையுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள பெரியவர்கள் மொத்தம் 22,047,448 பேர் அல்லது 94.2 விழுக்காட்டினர்  கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரியவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 22,775,864 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக அமைச்சகம் தனது கோவிட்நவ் (CovidNow) போர்ட்டலில் தெரிவித்தது.

நேற்றைய தினம் 256,497  டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 48,437,608 ஆகக் கொண்டு வந்ததாகவும் அது கூறியுள்ளது.

12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினர் 1,218,000  பேர்  அல்லது 38.7 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 79.7 விழுக்காட்டினர் அல்லது 2,3509,535 பேர் குறைந்தபட்சம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

Previous articleவெள்ள மீட்பு பணியின்போது சுயநினைவை இழந்த தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Next articleAnggota bomba rebah ketika bantu mangsa banjir meninggal dunia

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version