Home Hot News வெள்ள மீட்பு பணியின்போது சுயநினைவை இழந்த தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

வெள்ள மீட்பு பணியின்போது சுயநினைவை இழந்த தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மலாக்காவில் வெள்ள மீட்பு நடவடிக்கையின் போது சுயநினைவை இழந்த தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். முகமது தியா சே ஜுசோ 46, வியாழக்கிழமை (அக்டோபர் 21) அதிகாலை 3.11 மணிக்கு மலாக்கா  மருத்துவமனையில் உயிரிழந்தார். மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர்  Abu Bakar Katain ஒரு அறிக்கையில் தனது அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். இன்று அவரின் உடல் மஸ்ஜித் அன்-நூர் முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிகன் நைனா மெரிகான் முகமது தியாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.  முகமது தியாவின் தியாகங்கள் மறக்க முடியாதது. அல்லாஹ் அவரது ஆன்மாவை ஆசீர்வதிப்பார் மற்றும் அவரது அனைத்து நல்ல செயல்களுக்கும் வெகுமதி அளிக்கட்டும். அல்-பாத்திஹா என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

புதன்கிழமை (அக்டோபர் 20) மாலை சுமார் 5.30 மணியளவில், ஆயர் குரோவில் உள்ள கம்போங் சுங்கை புடாட்டில் வெள்ள மீட்புப் பணியின் போது மலாக்கா தெங்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி சுயநினைவை இழந்தார். முகமது தியா, குபு மலாக்கா தெங்கா நிலையத்தை சேர்ந்த மீட்பு நடவடிக்கைக் குழுவில் ஒருவராக இருந்தார்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 பேரை மீட்பதற்காக கம்போங் சுங்கை புடாட் சென்றிருந்தார்.

Previous article76 lagi meninggal dunia, jumlah kematian kini 28,138
Next articleநாட்டில் இதுவரை 94.2 விழுக்காடு பெரியவர்கள் , 38.7 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version