Home இந்தியா ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10,000 பேருக்கு HIV பாதிப்பு உறுதி !

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10,000 பேருக்கு HIV பாதிப்பு உறுதி !

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10,000 பேருக்கு HIV அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

ஆந்திராவில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் 1,020,000 பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 23,960 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அத்தோடு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்ட பாசிட்டிவ் ரேட் 0.02 விழுக்காடு ஆகும்.

இது 5ஆண்டுகள் கழித்து எய்ட்ஸ் பரிசோதனையில் நேர்மறை பதிலைப்பெற்றவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்திருந்தது.

கடந்த 2020- 2021ஆம் ஆண்டில் 750,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 9,918 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது நோய்க்குரிய அறிகுறி 0.01 ஆகும்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் HIV யினால் பாதிக்கப்பட்ட 192,390 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version