Home Hot News ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியது தொடர்பில் உலோக முலாம் பூசும் தொழிற்சாலையின் இயக்குநர், மேலாளர்...

ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியது தொடர்பில் உலோக முலாம் பூசும் தொழிற்சாலையின் இயக்குநர், மேலாளர் கைது

ஜோகூர் பாரு, டிசம்பர் 1:

சுங்கை சிலாங்காவில் சமீபத்தில் ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியது குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக பாசீர் கூடாங் தொழிற்பேட்டையில் உள்ள உலோக முலாம் பூசும் ஆலையின் இயக்குநர் மற்றும் மேலாளரை ஜோகூர் சுற்றுச்சூழல் துறை (DoE) கைது செய்துள்ளது.

ஜோகூர் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் முகமட் ஃபேமி யூசோஃப் கூறுகையில், உலோக முலாம் பூசும் ஆலையின் 50 வயதுடைய இயக்குநர் மற்றும் மேலாளர்,35, ஆகியோர் நேற்று நண்பகல் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

கடந்த திங்கட்கிழமை ஆற்றின் நிலை குறித்து தமது துறைக்கு புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.

DoE இன் பாசீர் கூடாங் கிளையைச் சேர்ந்த பணியாளர்கள், தொழிற்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் பச்சை நிறக் கழிவுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

கழிவுநீரின் மாதிரிகள் ஆய்வுக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version