Home மலேசியா நாட்டில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய அரசாங்கம் ஒப்புதல்

நாட்டில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய அரசாங்கம் ஒப்புதல்

கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டு நீதிபதிகளுக்கு தண்டனை வழங்குவதில் விருப்புரிமை அளிக்கிறது. புதன்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த கட்டாய மரண தண்டனைக்கான மாற்றுத் தண்டனை குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ், கட்டாய மரண தண்டனை விதிக்கும் 11 குற்றங்களுக்கு முன்மொழியப்பட்ட மாற்று தண்டனைகள் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புக்கொண்டது என்றும் அவர் கூறினார்.

அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இதனால் நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை மேம்படுத்துவதில் நாட்டின் தலைமையின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கிறது என்று வான் ஜுனைடி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version