Home மலேசியா சாலை ஓரத்தில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்டிருந்த பெண் குழந்தை

சாலை ஓரத்தில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்டிருந்த பெண் குழந்தை

தொப்புள் கொடியுடன் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று, தம்புனான், ஜாலான் கம்போங் கோரிகோட்டில் சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டது. போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னர் நள்ளிரவு 1.05 மணியளவில் பொதுமக்கள் குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.

அதிகாலை 2.38 மணிக்கு குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக தனது தரப்பினருக்கு புகார் கிடைத்தது என்று கெனிங்காவ் காவல்துறைத் தலைவர் நோர் ரஃபிதா காசிம் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் பெண் குழந்தை வீட்டிற்கு செல்லும் வழியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

குழந்தை ரோட்டில் வெள்ளைத் துணியில் பூ மாதிரி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. ஆச்சரியமடைந்த மக்கள், குழந்தையை காரில்  தூக்கிச் சென்றனர் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். பின்னர் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக குழந்தை தம்புனான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது குழந்தை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள், வழக்கின் விசாரணை அதிகாரி முகமட் தம்சா தஹ்லானை 0164486747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ரஃபிதா கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version