Home மலேசியா ஜோகூரில் வட்டி முதலைக் கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் எழுவர் கைது

ஜோகூரில் வட்டி முதலைக் கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் எழுவர் கைது

ஜோகூர் பாரு, செப்.29 :

கடந்த செப்டம்பர் 14 அன்று கோத்தா திங்கி மற்றும் இஸ்கந்தர் புத்திரியைச் சுற்றி நடத்தப்பட்ட சோதனைகளில் வட்டி முதலைக் கும்பலின் (Ah Long) உறுப்பினர்கள் என நம்பப்படும் ஏழு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக சிவப்பு வர்ணப்பூச்சு அடித்து மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல்களை விடுத்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

20 முதல் 32 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகளான ஆறு ஆண்களும் ஒரு பெண்ணும், உளவுத்துறை மற்றும் பொதுமக்களின் தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பல்வேறு வகையான ஒன்பது கைத்தொலை பேசிகள் , 11 சிம் கார்டுகள், நான்கு கார்கள் மற்றும் கடன் வாங்கியவரின் ஆவணங்கள் அடங்கிய 12 புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில் இந்தக் கும்பல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.

இந்த கும்பலின் செயல்பாடானது, முகநூல் மூலம் தம்மால் வழங்கப்படும் கடன்களை விளம்பரப்படுத்துவதும், கடன் வாங்குபவர்களை ஏமாற்ற சட்டப்பூர்வ பணக்கடன் வழங்கும் சேவைகளை வழங்கும் வணிக அட்டைகளை விநியோகிப்பதும் ஆகும்.

“இக்கும்பலால் அனுமதிக்கப்பட்ட கடன்கள் RM1,000 முதல் RM50,000 வரை, கடனாளியின் ஆவணங்களைப் பொறுத்து வழங்கப்பட்டன, அவை வாராந்திர அடிப்படையில் செலுத்த வேண்டிய கடன் வட்டியுடன் 30 சதவிகிதம் வசூலிக்கப்படும்” என்று, அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version