Home மலேசியா ஜாஹிட் ராஜினாமா செய்ய வேண்டும் : ஜோகூர் மந்திரி பெசார் வலியுறுத்தல்

ஜாஹிட் ராஜினாமா செய்ய வேண்டும் : ஜோகூர் மந்திரி பெசார் வலியுறுத்தல்

அம்னோ தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்தினார்.

2018ல் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் அடிச்சுவடுகளை அகமட் ஜாஹிட் பின்பற்ற வேண்டும் என்றும் அம்னோ தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஜோகூர் தேசிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கை இயக்குனர் கூறினார்.

இந்த   நடவடிக்கையானது  அம்னோவின் வலிமையை மீட்டெடுப்பதற்கு உதவும்.  இது கசப்பான  விஷயமாக  இருந்தாலும். அதனை பின்பற்றப்பவேண்டும்.  அம்னோ, MCA மற்றும் MIC ஆகியவற்றில் திறமையான  பல தலைவர்கள்  இருந்தபோதிலும்  மக்களின்  கருத்துக்களை  கேட்காததால் பலியாக்கப்பட்டனர்.

கட்சியின் எதிர்கால போக்கை மாற்றுவதற்கு நாம் அனைவரும்  வலிமையுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அரசியல் சுனாமியில் அம்னோ “சரிந்தது” என்றும் சமூகம் அம்னோவை நிராகரித்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.   ஜோகூரில் தேசிய முன்னணிக்கும் அம்னோவும் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கிடைத்திருக்கின்றன. பெர்லிஸ், கெடா, பினாங்கு, மலாக்கா, கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் எதிலும் வெற்றிப் பெறவில்லை.

Previous articleநான்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
Next articleபெர்லிஸ் : 14 தொகுதிகளைக் கைப்பற்றி பெரிக்காத்தான் நேஷனல் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version