Home மலேசியா அரண்மனைக்கு வெளியே வந்து ஊடகங்களைச் சந்தித்து ஆச்சரியப்படுத்திய மாமன்னர்

அரண்மனைக்கு வெளியே வந்து ஊடகங்களைச் சந்தித்து ஆச்சரியப்படுத்திய மாமன்னர்

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அரண்மனைக்கு வெளியே வந்து ஒரு குறுகிய செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி ஊடகங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.அரண்மனை மைதானத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஊடக கூடாரத்திற்கு அவர் நடந்து சென்று, இஸ்தானா நெகாரா முன்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை மீண்டும் வலியுறுத்தினார்.

தற்காலிக  அரசாங்கம் இன்னும் வழக்கம் போல் இயங்குகிறது. எனவே புகாரளிக்க ஏதாவது இருந்தால், அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள் என்று மாமன்னர் கூறினார். அந்த அறிக்கையில், சுல்தான் அப்துல்லா கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் தங்கள் பிரதமர் வேட்பாளர்களை முன்மொழிவதற்கான காலக்கெடுவை ஒரு நாள் நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் 2 மணி வரை தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய முன்னணி காலக்கெடுவை நீட்டிக்க கோரியதாக செய்திகள் வெளியாகின. அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பெரிகாத்தான் நேஷனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான் உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், அவை இன்று இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version