Home Top Story கோடிகளில் போனஸ்..!! – ஊழியர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீன நிறுவனம்…!

கோடிகளில் போனஸ்..!! – ஊழியர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீன நிறுவனம்…!

பீஜிங், கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கொத்து, கொத்தாக பணி நீக்கம் செய்து, ஊதியத்தையும் குறைத்து வருகின்றன.

இந்த சூழலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

வருவாய் 23 சதவீதம் உயர்வு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ‘ஹெனன் மைன்’ என்ற நிறுவனம்தான் தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்திருக்கிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் அதே வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் ஆக இருந்தது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப்போன நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க முடிவு செய்து, அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ஊழியர்களை பாராட்டியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version