Home Top Story அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியனுக்கு பதவி

அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான அருண் சுப்ரமணியனுக்கு பதவி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முதன்முறையாக இந்திய-அமெரிக்கரான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியன் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செனட் நீதிமன்ற கமிட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அருண் சுப்ரமணியனுக்கு பணி வழங்கப்படுகிறது.

அவர், பொதுமக்களின் வழக்கில் ஒவ்வொரு விசயத்திலும் நேரடியாக விசாரணை மேற்கொள்வார். மத்திய நீதிமன்ற அளவிலான பணியில் அவர் ஈடுபடுவார். இந்த நீதிமன்ற அமர்வில் சேவையாற்ற உள்ள முதல் தெற்காசிய நீதிபதியும் ஆவார் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு சுப்ரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, 2022-ம் ஆண்டில் 13 பேரை பைடன் நியமித்து உள்ளார். நீதிமன்ற பணியிடங்களில் ஒட்டு மொத்த அளவில் பைடனின் 26ஆவது நியமனம் இதுவாகும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version