Home மலேசியா போதைப்பொருள் கடத்தியதாக மலேசிய நடிகர் உட்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தியதாக மலேசிய நடிகர் உட்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு

மலாய் நாடகமான ‘ ‘Hati Tanpa Rasa’’ நடிகரும், வேப் (மின்னியல் புகைத்தல்) கடை உரிமையாளருமான முஹமட் இஸ்மாயில் சைட் பகீர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் இணைந்து போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நடிகர் முஹமட் இஸ்மாயில் சைட் பகீர் மற்றும் சர்விந்தர் சிங் ஹெர்னாம் சிங், 23,  டெல்சன் டீன் சாம்சன் அக்மல், 26, பர்கர் விற்பனையாளரான முஹமட் அமீர் ஹபீஸ் ஜமானி, 30, ஆகியோர், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு, Taman OUG Parklane, Off Jalan Klang Lama விலுள்ள வேப் கடையில் 494 கிராம் கஞ்சாவை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், ஆனால் போதைப்பொருள் வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அன்று அவர்களளிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கு அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்துப் படிக்கப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஒன்பது தடவை பிரம்படி அல்லது ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார்கள்.

இந்த வழக்கு இன்று நீதிபதி வோங் முன் விசாரணைக்கு வந்தது, பின்னர் நீதிமன்றம் மார்ச் 31 ஆம் தேதியை மீண்டும் செவிமடுப்பதற்கு அறிவித்தது.

முஹமட் இஸ்மாயில், டெல்சன் டீன் மற்றும் முஹமட் அமீர் ஹபீஸ் ஆகியோரின் சார்பில் வழக்கறிஞர் முஹமட் அஷ்மீர் அஷ்ரோப் ஆஜராகினர், அத்தோடு சர்விந்தர் சிங் சார்பில் வழக்கறிஞர் சாஸ்திதரன் சதைசீலன் ஆஜரானார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version