Home Top Story டைரக்டர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகைக்கு அடி உதை.. போலீசில் பரபரப்பு புகார்

டைரக்டர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகைக்கு அடி உதை.. போலீசில் பரபரப்பு புகார்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார். வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version