Home மலேசியா கிளாந்தானில் பாஸ் 39 இடங்களிலும் பெர்சாத்து 6 இடங்களிலும் போட்டி

கிளாந்தானில் பாஸ் 39 இடங்களிலும் பெர்சாத்து 6 இடங்களிலும் போட்டி

கிளாந்தான் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) அதன் 45 வேட்பாளர்களின் முழுப் பட்டியலை ஜூலை 27 அன்று வெளியிட உள்ளது.

பெரிக்காத்தான் நேஷனலின் (PN) இணைப்புச் செயலாளர் வான் ரோஸ்லான் வான் ஹமாட் கூறுகையில், கிளாந்தான் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாஸ் 39 இடங்களிலும், பெர்சாத்து 6 இடங்களிலும் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

அதில் ஆறு பெர்சாத்து வேட்பாளர்களும் முறையே கோக் லானாஸ், கோலா ஈப்போ, பலோ, நெங்கிரி, ஏர் லானாஸ் மற்றும் கோலாப்பிலா அல்லது புக்கிட் புங்கா ஆகிய இடங்களில் உள்ள மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு போட்டியிடுவார்கள் என்று அவர் இன்று கிளாந்தான் பாஸ் கட்டிடத்தில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் களமிறக்கப்படும் புதிய முகங்களில் 50 விழுக்காட்டினர் பல்வேறு கல்வி மற்றும் தொழில் பின்னணியில் உள்ளவர்கள் என்று கிளாந்தான் பாஸ் செயலாளருமான வான் ரோஸ்லான் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version