Home Hot News இந்தியாவின் உணவு பஞ்சத்தை போக்கிய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

இந்தியாவின் உணவு பஞ்சத்தை போக்கிய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

சென்னை:

பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக் கப்படுபவருமான எம்.எஸ் சுவாமிநாதன் இன்று (செப்.,28) காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் உணவு பஞ்சத்தை போக்கிய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கும் பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார்.பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பல்கலைகழகத்தில் இளநிலை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர் ஆவார். வேளாண் மைத்துறை செயலாளர், மத்திய திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியவர்.

இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன. தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகள், மகசேசே விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனர் சவுமியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சில நாட்களாக தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. இன்று காலை அவர் இயற்கை எய்தினார். கடைசி வரை விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். என் அப்பாவும், அம்மாவும் எங்களுக்குக் காட்டிய பாரம்பரியத்தை தொடர்வேன். அவரது கருத்துக்கள் பெண் விவசாயிகளை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு வழிவகுத்தன. அவர் ஆறாவது திட்டக் கமிஷனில் உறுப்பினராக இருந்தபோது, முதல் முறையாக, பாலினம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பகுதிகள் பாடப்பகுதியில் கொண்டு வரப்பட்டது என அவர் கூறினார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: நெருக்கடியான காலத்தில் வேளாண்மை யில் அவரது பணி பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. கோடிக்கணக்கான மக்களின் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தியவர். புதுமையின் ஆற்றல் காரணமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் வழி காட்டுதலில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அழியா முத்திரையை பதித் துள்ளது என பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version