Home Hot News திரிஷாவின் ‘The Road’! ஏன் இந்த viral?

திரிஷாவின் ‘The Road’! ஏன் இந்த viral?

உலகெங்கும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப் படமாக ‘தி ரோட்’ இணையதளங்களில் விமர்சனங்களை அள் ளுகின்றது. உண்மைச் சம்பவங்கள், தொடர் விபத்துகள், திரிஷா வின் அதிரடியான ஆக்ஷன் என இந்த திரைப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுவிட்டது.  நாளை அக்டோபர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப் படவிருக்கும் ‘தி ரோட்’ திரைப்படத்தை மலேசியாவில் MSK Cinemas Sdn Bhd மற்றும் KS Movie Sdn Bhd இணைந்து வெளி யிடுகின்றன. MSK வின் சந்திரமுகி 2 மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் திரிஷாவின் ‘தி ரோட்’ திரைக்கு வருகிறது.

இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் ரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையில் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மதுரையில் கடந்த 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும் இப்படத்தினை உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்த நிஜமான இடங்களுக்கே சென்று படப்பிடிப்பை நடத்தினராம் படக்குழுவினர். ‘தி ரோட்’ நிச்சயமாக திரி ஷாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. நாம் சந்திக்கும் விபத்துகள் எல்லாமே உண்மையில் விபத்துகள்தானா அல்லது திட்டமிட்டு நடத்தப்ப டுகிறதா? இந்த விபத்துகளின் பின்னால் இருப்பது யார் என்ற விசாரணையில் இறங்கி துணிச்சலாக அசத்தும் திரிஷாவின் கதாபாத்திரம் கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

‘தி ரோட்’ திரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார். மேக்கப் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ் தன்மையுடன் வரும் திரிஷாவின் சமூகத்தின் மீதான கோபம் பெண்களுக் கான துணிச்சல், வீரம், கோபம் போன்ற தனித்துவமான குணச்சித்திரங்களை வெளிப் படுத்தி வெற்றிகாணும் என்பதில் ஐயமில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version