Home Top Story சன் டிவி சீரியல் காதல் ஜோடியின் திடீர் திருமணம்… யார் தெரியுதா?

சன் டிவி சீரியல் காதல் ஜோடியின் திடீர் திருமணம்… யார் தெரியுதா?

சென்னை: சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் இன்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்து இருக்கிறார். நடிகை ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான். ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் பெரியோர்களின ஆசிர்வாதத்தோடு இரு வீட்டார் சம்மதத்தோடு நடைபெற்று இருந்த நிலையில் இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னதிரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது பல வருடங்களாகவே பின்பற்றப்பட்டு வருகிறது தான். அதிலும் சமீப காலமாக ஒரே சீரியலில் நடிக்காத நடிகர்கள் கூட காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

அந்த வகையில் தான் சில வருடங்களுக்கு முன்பு ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்து வந்து இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்யன் திருமணமும் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியானதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் இருவரும் வெவ்வேறு சேனலில் வெவ்வேறு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்குள் காதல் என்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version