Home Top Story மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்- ரமணன்

மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்- ரமணன்

கோலாலம்பூர்:

லேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்னாள் மித்ரா சிறப்புப் பணிக் குழுவின் தலைவர் டத்தோ ஆர் ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத்தின் சொத்தாகவும், ஆயுதமாகவும் இருக்கும் மித்ரா பிரதமரின் அதிகார வரம்பிற்குள் இருந்தாக் மிகவும் வசதியாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் நம்புவதாக அவர் கூறினார்.

இந்திய சமூகம் இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு வாக்களித்தது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது இருந்த நம்பிக்கை காரணமாகவே தவிர, வேறு எந்த அமைச்சருக்காகவோ அல்ல.

கடந்த 15 ஆவது பொதுத்தேர்தலில் சுமார் 90 விழுக்காட்டு இந்தியர்கள் அன்வாருக்குத் தங்களின் வற்றாத ஆதரவினைத் தெரிவித்தனர். இது இந்திய சமூகம் அவர் மீது கொண்ட நம்பிக்கைக்கு சான்று.

பிரதமர் துறையின் கீழ் மித்ரா இயங்குமாயின், பல்வேறான சலுகைகளும் சிறப்புகளும் கிடைக்கும். இதன் காரணமாக மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருக்க வேண்டும் என்று தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாட்டு துணையமைச்சர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version