Home Top Story மூன்று மாதங்களில் 90 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கியது யூடியூப்!

மூன்று மாதங்களில் 90 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கியது யூடியூப்!

பார்க்கத் தகுதியற்றவை என்று கருதப்படும் 90 லட்சம் வீடியோக்களை கடந்த மூன்று மாதங்களில் யூடியூப்பில் இருந்து நீக்கி உள்ளது அந்நிறுவனம்.

உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர்கள் யூடியூப் தளத்தில் தங்களது வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்களில் ரசிக்கத்தக்கவை பல இருந்தாலும் அருவருக்கதக்கவைகளும் ஏராளமானவை உள்ளன. அதனால் அத்தகைய வீடியோக்களை கண்டறிந்து நீக்கம் செய்வதை யூடியூப் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.

சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி வருகிறது. குறிப்பாக தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம், குழந்தை பாதுகாப்பு விதிமீறல், வன்முறை அல்லது கிராபிக் உள்ளடக்கம், நிர்வாணம் மற்றும் பாலியல் உள்ளடக்கம், தவறான தகவல் உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இதில் இந்தியாவிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தான் அதிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. நீக்கம் செய்யப்பட்டவைகளில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. அதாவது இந்த 3 மாதங்களில் 22,54,902 இந்திய வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளன.

அடுத்ததாக சிங்கப்பூரிலிருந்து பதிவிடப்பட்ட 12,43,871 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல அமெரிக்காவிலிருந்து பதிவிடப்பட்டிருக்கும் 7.88 லட்சம் வீடியோக்களும், இந்தோனேசியாவிலிருந்து பதிவிடப்பட்ட 7.70 லட்சம் வீடியோக்களும், ரஷியாவிலிருந்து பதிவிடப்பட்ட 5.16 லட்சம் வீடியோக்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதேபோல பல்வேறு நாடுகளின் சேர்ந்த பல லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கம் செய்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version