Home Top Story ‘தி ப்ரூஃப்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு

‘தி ப்ரூஃப்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு

2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார். மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தன்ஷிகா ‘தி ப்ரூஃப்’ படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெயிலர் யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி தி ப்ரூஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலை ஏப்ரல் 20 ஆம் தேதி இசையமைப்பாளர் இமான் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இப்படத்தில் அறிமுக இசையமைப்பாளரான தீபக் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version