Home Top Story ஆடு ஜுவிதம் : 25 நாளில் ரூ.150 கோடி வசூல்

ஆடு ஜுவிதம் : 25 நாளில் ரூ.150 கோடி வசூல்

மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் ‘தி கோட் லைப்’ (ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குனர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்தது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்தார். கடந்த 28- ந் தேதி தியேட்டர்களில் இப்படம் ‘ரிலீஸ்’ செய்யப்பட்டது. தமிழ், இந்தி,  மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ’ பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களில் ‘ஹவுஸ் புல்’ காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது.ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து வருகின்றனர். மேலும் இப்படம் தற்போது 25 – நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version