Home உலகம் ராணுவ வீரர்களை கோழைகள் என கூறிய டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு

ராணுவ வீரர்களை கோழைகள் என கூறிய டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு

முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு தாம் மரியாதை செலுத்த முடியாது எனவும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1918-ல் பிரான்சில் வைத்து கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தவே டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய சம்பவம் 2018 நவம்பரில் நடந்துள்ளது. மட்டுமின்றி அன்றைய நாள் மழையும் பெய்து வந்ததால், தமது தலைமுடி பாழாகிவிடும் என டிரம்ப் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் காலம் என்பதால், ஜனாதிபதி டிரம்ப் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளதுடன், அது வடிகட்டிய பொய் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமல்ல, போரிடுவது என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று அல்ல எனவும் டிரம்ப் தமது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், நேச நாடுகளின் பக்கம் அமெரிக்கா ஏன் தலையிட்டது என்பது இன்னமும் தமக்கு புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியில், பிரான்ஸ் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியன் பேரில் ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்ட கல்லறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பின்னடைவை சந்தித்துவரும் டிரம்ப், தற்போது ராணுவத்தினருக்கு எதிராக தெரிவித்துள்ளதாக கூறப்படும் கருத்துகள் பொதுமக்களிடையே, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version