Home உலகம் சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா

சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா

சீனாவின் ஹூபே மாகாணத்தில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்நிஸ்ஸின் சிலை உள்ளது. சீன அரசால் அதிகம் மதிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் இவர்.சீன-ஜப்பான் போரின்போது 1938-ஆம் ஆண்டு இவரது மருத்துவ பங்களிப்பே இதற்கு இதற்கு முக்கிய காரணம். 1938 முதல் 1942 வரை சீன-ஜப்பானிய போர் உச்சத்தில் இருந்தது.

அப்போது சீனாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா சார்பாக ஐந்து மருத்துவர்கள் கொண்ட ஓர் குழு சீனாவுக்கு உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவர்தான் துவாரகநாத். பயிற்சி பெற்ற சிறந்த இந்திய மருத்துவர்களில் ஒருவரான அவர் சீன ராணுவ படைக்கு உதவிகள் செய்துள்ளார்.இதனால் சீனாவுக்கு அவர்மீது என்றும் தனி மரியாதை உண்டு.

தற்போது லடாக் எல்லை பிரச்னை காரணமாக சீனா-இந்தியா ஆகிய நாடுகள் கடுமையாக போர் புரிந்துவரும் நிலையில் சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் துவாரகநாத் பிறந்தநாள் வந்தபோது சீன மற்றும் இந்திய மருத்துவ மாணவர்கள் ஓர் ஆன்லைன் விழாவில் கலந்துகொண்டனர்.

இதில் துவாரகநாத் பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சமீபத்திய லடாக் எல்லை பிரச்னை குறித்த ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுபோன்ற வேறுபாடுகளை களைந்து இந்தியாவும் சீனாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சீன-இந்திய நல்லுறவை விரும்பும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீன-இந்திய வேற்றுமை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் துவாரகநாத் இரு நாடுகளுக்கும் ஓர் இணைக்கும் பாலமாக இன்றும் திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version