Home உலகம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து- பணக்கார நாடுகள் முடிவு !

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து- பணக்கார நாடுகள் முடிவு !

அடுத்த வாரத்தில் ஜி20 நாடுகளின் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. காணொளி காட்சி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில், தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கூடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி, தேவைகள் மற்றும் உலக நாடுகளிலேயே பகிர்ந்துகொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தினை குறைந்த விலையில், அந்த நாடுகளுக்கு மருந்துகளை அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளன.

பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு 450 கோடி டாலர் உதவி செய்துள்ளது.

இரண்டு நாள் நிகழ்வாக இந்த அமர்வு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக ஜி20 உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா மருந்து விநியோகத்தில் ஒவ்வொரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என்று கூறினர்.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்த பேச உள்ளது. உலக நாடுகளின் ஏற்றுமதி, ஒற்றுமையுடன் செயல் படுவது, தடுப்புமருந்து உருவாக்கத்தில் தீவிரம் என பல்வேறு விஷயங்கள் பேசப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version