Home உலகம் பணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை

பணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை

மெல்போர்னில் மரணமடைந்த 11 மாத குழந்தையின் பெற்றோரிடம் 1,000 ஆஸ்திரேலியா டாலர் கேட்டு மிரட்டிய மலேசிய பெண் ஒருவர் விக்டோரியாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற அவரின் வேண்டுகோளை மறுத்ததால் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் சித்தி நூர்ஹிதாயா மிரட்டி பணம் கேட்டதால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தங்களின் மரணமடைந்த 11 மாத அமியாவின் புகைப்படம் அடங்கிய தொலைபேசியை மீட்டெடுக்க ஆசைப்பட்ட தம்பதியினரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதற்காக சித்தி நூர்ஹிதாயா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் சித்தி தனது தண்டனையை குறைக்குமாறு மேல்முறையீடு செய்தார். அதில் சிறைத் தண்டனை காலம் அதிகமாக இருப்பதாகவும் மேலும் தன்னை நம்பியுள்ளவர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் ஏபிசி நெட்வொர்க் தலைமை நீதிபதி அன்னே பெர்குசன் மற்றும் நீதிபதி ஸ்டீபன் மெக்லீஷ் ஆகியோர் அவரின் மேல் முறையீட்டிற்கு உடன்படவில்லை என்று அறியப்படுகிறது. தண்டனை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் இல்லை அவர்கள் தெரிவித்தனர்.

சித்தி  நூர்ஹிதாயாவின் செயலால் ஏற்பட்ட வேதனை இன்னும் நீடிக்கிறது என்று அமியாவின் தந்தையான ஜே கூறியிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version