Home COVID-19 பிலிப்பைன்ஸில் டெல்தா மாறுபாடுடைய வைரஸ் வேகமாக பரவுவதால் மருத்துவமனையாகிய தேவாலயம்

பிலிப்பைன்ஸில் டெல்தா மாறுபாடுடைய வைரஸ் வேகமாக பரவுவதால் மருத்துவமனையாகிய தேவாலயம்

மணிலா: பிலிப்பைன்ஸில் திங்கட்கிழமை (ஆகஸ்டு 23) கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை 18,332 அன்று ஆக பதிவு செய்துள்ளது. இத்திடீர் அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் டெல்தா மாறுபாடுடைய வைரஸின் வேகமான பரவலே ஆகும் என்று பிலிப்பைன்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது மருத்துவமனையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,857,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31,961 பேர் உயிரிழந்துள்ளாார்கள்.

இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பிலிப்பைன்ஸ் அனுமதி அளித்துள்ளது.

ஆசியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு முதல் முதலில் அனுமதி அளித்த நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகிறது.

பிலிப்பைன்ஸில் ஸ்புட்னிக் லைட் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பதாவது கொரோனா தடுப்பூசி ஆகும். ஏற்கனவே பைசர், மொடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தடுப்பூசி அறிமுகம் முக்கியம் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய்க்கு முன்னர் பிலிப்பைன்ஸ் ஆசியாவில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக இருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9.6 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version