Home மலேசியா பூலாவ் மாவாரில் நடைப்பயணம் சென்றதாக நம்பப்படும் IPTS மாணவரை காணவில்லை

பூலாவ் மாவாரில் நடைப்பயணம் சென்றதாக நம்பப்படும் IPTS மாணவரை காணவில்லை

பூலாவ் மாவாரில் புதன்கிழமை தனியாக நடைப்பயணம் சென்றதாக நம்பப்படும் தனியார் உயர்கல்வி நிறுவன (IPTS) மாணவர் ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.

முகமட் அக்மல் ஹக்கிமி இஷாக் (20) என்ற மாணவரே காணாமல் போனதாக, அவரது தந்தை நேற்று குளுவாங் காவல் நிலையத்தில் புகாரளித்ததாக அவர் கூறினார்.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பூலாவ் மாவாரை அண்மித்த பகுதியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது என நம்பப்படும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பிலும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“நேற்று மாலை 5 மணியளவில் காணாமல்போனவரை கண்டுபிடிப்பதற்காக ஒரு தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை தொடங்கப்பட்டது, இதில் 22 அதிகாரிகள் மற்றும் மெர்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகம், எண்டாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சாதகமற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக நேற்று மாலை 7 மணிக்கு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் இன்று காலை 8 மணிக்கு SAR நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தீவைச் சுற்றியுள்ள நிலம் மற்றும் கரையோரப் பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அப்துல் ரசாக் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version