Home மலேசியா RTK 2.0 போலி தொழிலாளர் மறுசீரமைப்பு முகவர்களை கைது செய்த குடிநுழைவுத்துறை

RTK 2.0 போலி தொழிலாளர் மறுசீரமைப்பு முகவர்களை கைது செய்த குடிநுழைவுத்துறை

தொழிலாளர் மறுசீரமைப்பு திட்ட முகவர்களாக மாறுவேடமிட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவின் பின்னணியில் இருப்பதாக நம்பும் இருவரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளதாக அதன் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ இன்று தெரிவித்தார். ஒரு மியான்மர் நாட்டவர் 50  நேற்று கைது செய்யப்பட்டதாகவும் மற்றொரு சந்தேக நபரான ஒரு வங்காளதேச நாட்டவர் கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில்  கைது செய்யப்பட்டதாக  அவர் கூறினார். இருவரும் மலேசியர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

RTK 2.0 திட்டத்திற்கு வெளிநாட்டு தொழிலாளர் முகவர்களாக வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நாட்டினரை குறிவைத்து செயல்படுவதே அவர்களது முறையாகும். அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அவர்கள் குடிநுழைவு அலுவலகத்தில் திட்டத்திற்கான பதிவுகளை எளிதாக்குவது போன்ற சேவைகளை வழங்கினர். மேலும் ஒரு வருடமாக செயல்படுவதாக நம்பப்படுகிறது என்று ரஸ்லின் கூறினார். இந்த குழு பாதிக்கப்பட்டவர்களிடம் பதிவு செய்வதற்கு 1,500 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட் வரை வசூலித்ததாக அவர் கூறினார்.

நாங்கள் 91,000 ரிங்கிட் ரொக்கம், 12 வங்காளதேச கடப்பிதழ்கள், ஒரு இந்தோனேசிய கடப்பிதழ், நிறுவனத்தின் ஆவணங்கள், பணியாளர்களின் மறுசீரமைப்பு திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினோம் என்று அவர் கூறினார். குடிநுழைவுச் சட்டம் 1959/63, கடப்பிதழ் சட்டம் 1966 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் இருவரும் புத்ராஜெயா குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஸ்லின் கூறினார். விசாரணைக்கு உதவுவதற்காக அவர்களின் வாக்குமூலங்களை வழங்க குடிநுழைவு அதிகாரிகள் மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version