Home மலேசியா தேடப்பட்டு வந்த நபர் பிடிப்பட்டார்

தேடப்பட்டு வந்த நபர் பிடிப்பட்டார்

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் 27 வயதுடைய சந்தேக நபரை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர் போலீசாரை ஏமாற்றி தனது மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட்டினார்.

அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் அச்சந்தேக பேர்வழியின் தோள் பையில் இருந்து புக்குள் லீமா என்ற ஆயுதத்தை கைப்பற்றியதோடு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அம்மோட்டார் சாலா செளத் வட்டாரத்தில் காணாமல் போனதாக புகார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.  அந்நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஸ்தாப்பாக் டானா கோத்தா வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தததாக ஒப்பு கொண்டார். மேலும் அவரின் சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் ஹொரோயின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அந்நபர் மீது பல்வேறு வகையான  19 குற்றச்சாட்டு இருப்பதோடு மேலும் இரண்டு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வரும்  நபர் என்றும் செக்‌ஷன்  7(1) அந்நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைருல் நிஜாம் கூறினார். குற்றம் நிரூபிக்கபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டன விதிக்கப்படும்.

மேலும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் நடைபெறும்  வழிப்பறி, திருட்டு ஆகியவை குறித்து பொதுமக்கள் 03-22972222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version