
கோலாலம்பூர்
புறநகர் பிராட்பேண்ட் (SUBB), கிராமப்புற பிராட்பேண்ட் (RBB) திட்டங்கள் மூலம் நிலையான வரி பிராட்பேண்டிற்கான சந்தா விகிதம் இந்த ஆண்டு செப்டம்பரில் ஒன்பது சதவீதம் அதிகரித்து 45 சதவீதமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 36 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் வரை மொத்தம் 654,812 இணைப்புகள் இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் தொடர்பு மல்டிமீடியா துணை அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் ஆபிடின் தெரிவித்தார்.
“மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனின் (எம்.சி.எம்.சி) ஒத்துழைப்புடன் தகவல் தொடர்பு மல்டிமீடியா அமைச்சகம் (கே.கே.எம்.எம்) எப்போதும் கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிவேக பிராட்பேண்ட் ஆக்கிரமிப்பை வழங்குவதன் மூலம் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று மக்களவை கேள்வி நேரத்தில் கூறினார்.
இணைய நெட்வொர்க் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அமைச்சின் தற்போதைய , எதிர்கால முயற்சிகளை அறிய விரும்பிய டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் மொஹமட் அகினுக்கு பதிலளித்த துணை அமைச்சர் இது மிகவும் பரவலாகவும், வேகமாகவும், மலிவாகவும், SUBB மற்றும் RBB திட்டங்களைத் தொடர்ந்து புறநகர் கிராமப்புறங்களில் இணைய அணுகலின் சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.