பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா? – Palli Vilum Palan..!

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா? – Palli Vilum Palan..!

பல்லி விழும் பலன் : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் என்பதையும், பல்லி சாஸ்திர பலன்களையும் இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க… பல்லி எல்லார் வீட்டிலும் எளிதாக இருக்க கூடியது.

பல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது வரலாற்று புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பல்லி என்பது நவகிரகங்களில் ஒன்றான கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும்அசுரனின் தலையை வெட்டியது விஷ்ணு பகவானாவார். தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை.

வீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு மிகவும் செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. பல்லி கத்துவது முதல், பல்லி உடலில் விழுவது முதல் அனைத்து பலன்களையும்(Palli Vilum Palan) இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்..!

பல்லி விழும் பலன்(palli vilum palan) – தலை:-

பல்லி விழும் பலன்கள் தலை:- முதலில் பல்லி தலையில் விழுந்தால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பல்லி தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போக இருக்கும் கெட்ட நேரத்தை குறிக்கின்றது.

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.

தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிக்கின்றதாம் பல்லி. இது மட்டும் இன்றி மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இன்றி இருப்பார்கள், மேலும் உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.

பல்லி விழும் பலன்வயிறு:

பல்லி விழும் பலன்கள் வயிறு: வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி,  வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.

பல்லி விழும் பலன்நெற்றி:

பல்லி விழும் பலன்கள் நெற்றி:- நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, அதுவே நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கடாய்ச்சியம் என்று பல்லி சாஸ்த்திரம் கூறுகிறது.

பல்லி விழும் பலன்(palli vilum palan) – தலை முடியில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் தலை முடி:- தலையில் இல்லாமல் தலை முடியின்மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை நிகழும் என்பதன் அர்த்தமாகும்.

பல்லி விழும் பலன்முகத்தில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் முகம்:- முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தமாகும்.

பல்லி விழும் பலன்(palli vilum palan) – கண்களில் பல்லி விழுந்தால்:

கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்

கண்வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.

பல்லி விழும் பலன்புருவத்தில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் புருவம்:- அதேபோல் புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.

அதுவே உங்கள் கண்ணம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.

பல்லி விழும் பலன்இடது கை அல்லது இடது கால்:

பல்லி விழும் பலன்கள் பாதம்:- இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.

அதுவே வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.

பல்லி விழும் பலன் பாதத்தில் பல்லி விழுந்தால்:

வரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தமாகும்.

பல்லி விழும் பலன்தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:-

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலைமதிப்பு மிக்க பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க பெருமாம்.

பல்லி விழும் பலன்தொடையில் பல்லி விழுந்தால்:

தொடையில் பல்லி விழுந்தால் தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்:

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்.? இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்கும்.

பல்லி விழும் பலன்கழுத்து பகுதியில்

கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். அதுவே வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.

பல்லி விழும் பலன்(palli vilum palan) – மூக்கு பகுதியில்:

மூக்கு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.

மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.

மேல் கூறப்பட்டுள்ள சம்பவங்களுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்

Palli vilum Palan : பல்லி உங்கள் மீது விழுந்துவிட்டால் உடனே குளித்துவிடுங்கள். குளித்த பின்பு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள் அல்லது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.

வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

இல்லையெனில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட பல்லியின் சிலை உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம், இந்த பல்லியை தொட்டு வணங்கினால் வரும் காலங்களில் ஏற்படும் சோகங்கள் நீங்கும் மேலும் நன்மை நிகழும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here