கோலாலம்பூர்: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று (மே 20) நிலவரப்படி, 2,441 அமெரிக்க டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது புதிய வரலாற்று உச்சமாகும். இதன் எதிரொலியாக மலேசியா, சிங்கப்பூர் உட்பட, உலகச் சந்தைகளில் தங்கத்தின் விலை தடாலடியாக ஏறியுள்ளது. இன்று மலேசியாவில் 22 கரட் (916) ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 336 ரிங்கிட்டாகவும்,...
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள தனது பெட்ரோல் நிலையங்களை சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான சவூதி அராம்கோவிடம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படக்கூடும் என்றும், பேச்சுவார்த்தைகள் குறித்து மேல் விவரங்களை வெளியிட ஷெல் நிறுவனம் மறுத்துவிட்டது. இந்நிலையில், அராம்கோ நிறுவனமும் கருத்து தெரிவிக்க...
கோலாலம்பூர்: கடந்த ஏப்ரல் மாதத்தில் புரோட்டானின் விற்பனை 17.1% அதிகரித்துள்ளது, அதாவது 11,025 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உள்நாட்டில் அதிகரித்த கேள்வி என்று, தேசிய கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 50,175 கார்களை புரோட்டோன் விற்பனை செய்துள்ளதாகவும், இது 2023 ஆம்...
கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை (RM10.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக நேற்று (மே 2) உறுதியளித்துள்ளது.மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவுவது இதன் நோக்கம் என்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நதெல்லா கூறினார். இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய...
கோலாலம்பூர்: அமெரிக்க பெடரல் ரிசர்வ் (FED) அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்ததை அடுத்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.7705/7775 ஆக இருந்தது, இந்த மதிப்பு கிரீன்பேக்கிற்கு எதிராக நேற்று 4.7700/7750 ஆக இருந்தது என்று...
ஹராரே: ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளது. இதையடுத்து அங்குள்ள ஜிம்பாப்வே டாலருக்கு பதில் நேற்று புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. ஏப்ரல் மாதமே இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது மக்கள் பயன்படுத்தும்...
கோலாலம்பூர்: இன்றும் நாளையும் நடைபெறும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் (FED) கூட்டத்திற்கு முன்னதாக, கிரீன்பேக் உறுதியாக இருந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி, நேற்று திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7650/7700 என்ற நிலையிலிருந்து, இன்று சற்று குறைந்து 4.7700/7750 ஆக...
மேத்தா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் டீப்ஃபேக் ஆபாசங்களை அகற்றுவது பெரும் சவாலாகவும், சட்டச் சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மேத்தா தனது வருமானத்திற்காக பெருமளவு விளம்பரங்களையே நம்பி உள்ளது. ஆனால் அந்த விளம்பரங்கள் டீப்ஃபேக் அடிப்படையிலான போலியாகவும், அனுமதி பெறாத பிரபலங்களின் நகலாவும் அமைந்து விடுகின்றன. கூடவே...
கோலாலம்பூர்: KFC நிறுவனம், மலேசியாவில் இயங்கிவந்த 100க்கும் மேற்பட்ட அதன் கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது. காஸாவில் போர் தொடரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவுடன் தொடர்புடைய வர்த்தகங்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் போக்கு மலேசியாவில் அண்மை மாதங்களாக நிலவுகிறது. அதனால், மலேசியாவில் செயல்படும் 108 KFC துரித உணவகக் கிளைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக கூறப்படுகிறது. கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போ,...
ஹைதராபாத்: இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் மசாலாப் பொடிகளில் கலந்துள்ள பொருள்களின் விவரங்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) சேகரித்து வருகிறது. அவற்றின் தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி ரசாயனம் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “நாங்கள் நிலைமையை அறிந்துள்ளோம். கூடுதல் விவரங்களை சேகரித்து வருகிறோம்,” என்று ஏப்ரல் 26ஆம் தேதி ராய்ட்டர்ஸிடம் ‘எஃப்டிஏ’...