நிலச்சரிவில் இருவர் புதையுண்டிருக்கலாம்!

ஈப்போ

ங்குள்ள தம்புன் வட்டாரத்தின் ஒரு மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள ஹோட்டல் பகுதியின் நிலச்சரிவில் இருவர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேராக் தீயணைப்பு மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதிகாலை 1.28 மணியளவில் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு ஆண்  பெண் ஆகிய இருவர் புதையுண்டிருக்கலாம் என சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் குறித்து ஓர் அழைப்பு வந்தவுடன் மீட்புப் பணிக்காக ஈப்போ தீயணைப்பு,  மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு மீட்பு நடவடிகையில் இறங்கியதாக  அவர் இன்று இங்கே  அறிக்கையில் தெரிவித்தார்.

இப்போது வரை தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் பலியான இருவருக்கும் சொந்தமானது என நம்பப்படும் இரண்டு ஜோடி விளையாட்டு காலணிகளையும் கண்டதாகவும் அவர் கூறினார்.

0