பரம ஏழைகளில் புதிய ஏழைகள்

எண்ணிக்கை ஆய்வு தேவை!

கொரோனா தாக்கம் பல தொழில்முனைப்பாளர்களை அப்பட்டமாகத் தாக்கி விழ வைத்திருக்கிறது. மிகவும் வசதியாக தொழில் புரிந்துவந்தவர்களை தலைகீழாக விழவைத்தும் இன்னும் பலரை எழமுடியாமல் செய்தும் இருக்கிறது. 

பெரும்பான்மையான  40 வகை மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாகியிருக்கிறது.  பலர் புதிய எழைகள் என்ற பட்டியலில் இடம்  பிடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏழைப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உதவிகள் பெறத்தக்கவர்களாக மாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

வழக்கமான அரசு உதவிகளை இவர்கள் பெற்றதில்லை. புதிய ஏழைகள் என்பதல் இவர்கள் விடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தொடர்ந்து கோவிட் பாதிப்புகள் சமூக முடக்கங்கள் தொடருமானால்  அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும் என யூனிவர்சிட்டி உத்தாரா மலேசிய பேராசிரியர் டாக்டர் குபேரன் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் அவர்கள் அமைதியாகவே இருப்பதால் யாரும் கண்டுகொள்ளும் வாய்ப்பும் இல்லை. புதிய ஏழைகள் இன்னும் கணக்கில் சேராததால் அவர்களின் விவரங்கள் முழுமையாக கவனிக்கப்படவும் வேண்டும் என அவர் கருத்துரைத்திருக்கிறார்.

அவர்கள் மீண்டும் எழும்வரை புதிய ஏழைகள் பட்டியலில் அனத்து அரசு உதவிகளும் பெறத்தக்கவர்களாக மாற்றப்படவேண்டும்.