ஸ்தாப்பாக் ஜெயாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவரை தேடிவரும் போலீசார்

கோலாலம்பூர் ஸ்தாப்பாக் ஜெயாவில் தங்கச் சங்கிலியை திருடிய நபரை  போலீசார் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். சம்பவம் தொடர்பான ட்விட்டர் கணக்கின் உரிமையாளரால் பதிவேற்றப்பட்ட 25 வினாடி வீடியோவை நேற்று காலை 11.50 மணியளவில் அவரது தரப்பு  கண்டறிந்ததாக வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்டவர் ஸ்தாப்பாக் ஜெயாவில் உணவு வாங்குவதற்காக சாலையோரம் நின்றார். அதற்கு முன்பு சந்தேக நபர் ஒருவர் நீல மற்றும் கருப்பு யமஹா 135 எல்சி மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் இருந்து வந்து பாதிக்கப்பட்டவரின் தங்க சங்கிலியை திருடினார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் சிவப்பு ஹெல்மெட் மற்றும் கறுப்பு நிற நீண்ட கை சட்டை அணிந்திருந்தார் என்று அவர் இன்று ஹரியான் மெட்ரோவிடம் கூறினார். துப்பாக்கி இல்லாமல் கொள்ளையடித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது பிரிவின் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த பொது சாட்சியாக இருந்தால், விசாரணைக்கு உதவ முன் வந்து தகவல்களை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here