கந்தன் குகை மடாலய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற சிமெண்ட் நிறுவனத்தின் முயற்சியை ஈப்போ உயர்நீதிமன்றம் நிராகரித்தது

ஈப்போ, சீமோரில் உள்ள குனோங் காந்தனில் உள்ள தம்ம சாக்யமுனி குகை மடாலயத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற சிமென்ட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செவ்வாய்க்கிழமை (அக். 4) இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளை பரிசீலனை செய்த நீதித்துறை ஆணையர் பூபிந்தர் சிங் குர்சரண் சிங் ப்ரீத் இந்த தீர்ப்பினை வழங்கினார்.

வாதி மற்றும் பிரதிவாதியின் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், வாதியின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்று அவர் கூறினார்.நீதிமன்ற அறைக்கு வெளியே சந்தித்தபோது, ​​மடாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய லியோங் சியோக் கெங், முடிவில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

இந்த மடாலயம் பல ஆண்டுகளாக உள்ளது, குனோங் கந்தனில் மட்டுமே காணக்கூடிய சிறப்பு வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. வழக்குக்காக நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன, அதனால் நாங்கள் முடிவில் மகிழ்ச்சியடைகிறோம். வாதி இன்னும் மேல்முறையீடு செய்யலாம் அல்லது சிவில் வழக்கை செய்யலாம். ஆனால் அவர்கள் மடத்தை தனியாக விட்டுவிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் 20 துறவிகள் மற்றும் பக்தர்களுடன் கலந்து கொண்ட மடாலய மடாதிபதி சியோங் சாய் டின், தற்பொழுது அமைதியாக தங்க முடியும் என்றும் நிம்மதியாக இருப்பதாக கூறினார். நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தோம். இன்று எங்களுக்கு ஆதரவாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்த நாளை நினைவுகூரும் வகையில் நாங்கள் ஒரு சிறப்பு பிரார்த்தனை நடத்துவோம். மேலும் நிறுவனம் மீண்டும் எங்களுக்காக வராது என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

சீமெண்ட் நிறுவனம் பிக்குகள் சட்டவிரோதமான மற்றும் அறியப்படாத குடியேற்றவாசிகள் எனக் கூறி அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை பெற 89 விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தது. இந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர்கள் நிமிஷா ஜெயா கோபி மற்றும் வோங் செ சின் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here